Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. கைரேகை வைத்தது எனக்கு தெரியும்….. ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்….!!!

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஏறக்குறைய 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதையடுத்து மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், 78 கேள்விகள்  ஓ.பி.எஸ்யிடம்  கேட்கப்பட்டுள்ளன. இதை அடுத்து அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு,

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது.

சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன், பொதுவெளியில் எங்கும் பேசவில்லை.

இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதா தான். மேலும் இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.

அரசு அலுவல்கள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Categories

Tech |