ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி வால் மேல் நடந்த அம்மன் திருக்கோவில் மைதானத்தில் வைத்து பள்ளி-கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை விதித்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய இயக்கம், கட்சிகள் கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை, ஐக்கிய ஜமாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கமலி, மாவட்ட உலமா இப்ராஹிம் வைஜி, பாசித், பெண்கள் ஆண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.