பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து மூன்றாவது வாரங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்ஜெலன்ஸ்கி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, “ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக பேச தயாராக இருக்கிறேன் எனவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு வார்த்தை தான் ஒரே வழி என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில் ரஷ்யாவின் படை எடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையின் தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் நோட்டா உறுப்பினராக இருந்தால் இந்த போர் தொடங்கி இருக்காது என நான் நம்புகிறேன். நோட்டா உறுப்பினர்கள் எங்களை கூட்டணியில் பார்க்க தயாராக இருந்தால் அதை உடனடியாக செய்யுங்கள். ஏனென்றால் மக்கள் தினந்தோறும் இறக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.