ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பொதுமக்களிடமிருந்து வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை , வங்கி கடன் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 310 மனுக்களை பெற்றுள்ளார்.
மேலும் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி 9 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், மருத்துவ உதவித் தொகையாக மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 31 குழந்தைகளுக்கு உதவி தொகை, கொரோனா தொட்டால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி போன்றவற்றை வழங்கியுள்ளார்.
மேலும் வெளிநாட்டில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 பேருடைய குடும்பங்களுக்கு 50 ஆயிரம் என 9 பேருக்கு உதவித்தொகை, நீரில் மூழ்கி உயிரிழந்த சக்திவேல் என்பவரின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் உதவித் தொகை, இளையான்குடி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆனை மற்றும் அமைப்புசாரா நல வாரியத்தின் கீழ் பதிவு செய்த 10 பேருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்க்கான ஓய்வூதியம் ஆணை போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கி சிறப்பித்துள்ளார்.