கொரோனா குறித்த ஆய்வறிக்கையில் 5 மாவட்டங்களில் தொற்று முழுமையாக இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 52 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 22 மாவட்டங்களில் 10-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் மற்றும் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதைத்தொடர்ந்து மீதமுள்ள 6 மாவட்டங்களில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 97 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 163 பேர் மருத்துவமனையிலும், 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இருக்கின்றனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட கொரோனா பாதிப்பு அறிக்கையின்படி 34,52,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 34,13,841 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும், தொற்று பாதிக்கப்பட்ட 576 நபர்களில் 200 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.