Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!

நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை காலங்களில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்தியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள்.

அந்த வகையில், நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தைச் சார்ந்த கிறித்துவ மக்கள் பொங்கல் கொடியேற்றி உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆலயங்களில் சிறப்பு பிராத்தனை செய்தனர். இதனையடுத்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று கடலில் நீச்சல் போட்டி, கட்டுமர போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான மீனவ மக்கள் மிகவும் உற்சாகமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பொங்கல் பண்டிகையினை சிறப்பிக்கும் வகையில் அந்த மீனவ கிராமம் விழா கோலம் பூண்டிருந்தது.

Categories

Tech |