ரஷ்ய படைகள் நிகழ்த்திவரும் வான் தாக்குதலால் மரியு போல் நகர தொழிற்சாலைகள் வெடிக்கும் ட்ரான் காட்சிகளை உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது.
துறைமுக நகரமான மரியு போலை மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை உக்ரைன் இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர். இதனையடுத்து சர்வதேச வர்த்தகத்தில் மரியு போல் நகரை இடம் பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.