Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 11% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு தடாலடி….!!!!!

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச மாநில அரசு ஏறத்தாழ 6 லட்சத்து 67 ஆயிரம் நிரந்தர ஊழியர்களின் அகவிலைப்படியை 11% உயர்த்தி அண்மையில் அறிவித்து இருந்தது. அந்த அடிப்படையில் 31%  ஆக உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி தொகை ஏப்ரல் மாதத்தில் பெறப்படும் மார்ச் மாதம் சம்பளத்தில் இருந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது வரையிலும் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 20% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதையடுத்து ஓய்வூதியதாரரின் அகவிலைப்படியை உயர்த்த சத்தீஸ்கர் அரசின் ஒப்புதல் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசை போன்றே மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 31 % அகவிலைப்படி வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்த நிலையில் மாநில அரசின் பட்ஜெட்டிலும் இதற்கான ஒதுக்கீடு தற்போது செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறைத் தலைவர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், நிதித் துறையின் துணைச்செயலர் பி.கே.ஸ்ரீவஸ்தவா கூறியபோது, 2022 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசின் கருவூலத்தில் வருடத்துக்கு மூன்றரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தனித்தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ள அரசாங்கம் பெரு நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் அதிகாரிகளின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படியை அதிகரிக்க முடிவு செய்வதாக தெரிவித்துள்ளது. தற்போது அகவிலைப்படி உயர்வினால் யார் எவ்வளவு பயன் பெறுவார்கள் என்று பார்க்கையில்,

# முதல்வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.22 ,000 முதல் 25 ஆயிரம் ரூபாய்

# 2-ம் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.15,000 முதல் ரூ.21 ஆயிரம் ரூபாய்

# 3-ம் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.4,500 முதல் ஆறரை ஆயிரம் ரூபாய்

# 4-ம் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.2,000 முதல் ரூ.3, 300 ரூபாய்

# ஆசிரியர்கேடர் – ரூ.3,300 முதல் ரூ.5,500

Categories

Tech |