ஜென்டில்மேன் 2 படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே ஷங்கரின் முதல் திரைப்படமாகும். இந்நிலையில் ஜென்டில்மேன் 2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளநிலையில் குஞ்சுமோன் தயாரிக்கின்றார்.
சென்ற சில மாதங்களுக்கு முன்பாக எம்எம் கீரவாணி இசையமைப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் குறித்த தகவல் இதுவரையிலும் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில் தற்போது கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வந்திருக்கின்றது.