எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பார்த்து மகன் மற்றும் மகள் சொன்னதை பேட்டியில் பகிர்ந்துள்ளார் சூர்யா.
பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடங்களில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்புபஞ்சு, தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா பேட்டி அளிக்கும் போது உங்கள் மகன் மற்றும் மகள் படத்தை பார்த்துவிட்டு என்ன கூறினார்கள் என்று கேட்ட பொழுது அவர், என்னுடைய மகள் படம் பிடித்திருப்பதாகவும் என்னுடைய ரோல் நன்றாக இருந்ததாகவும் ஜெய்பீம், சூரரைப்போற்று திரைப்படங்களை தொடர்ந்து இந்த படமும் தன்னுடைய ஃபேவரட் படம் என்று கூறினாராம். மேலும் மகன் கூறியதாவது உங்களிடம் இருந்து இப்படி ஒரு அவதாரத்தை எதிர்பார்க்கவில்லை. படம் நன்றாக இருப்பதாக கூறினார் என சூர்யா தெரிவித்திருக்கின்றார்.