பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான டிடியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜேவாகவும், ஆர்.ஜேவாகவும், மாடலாகவும் திகழ்பவர் திவ்யதர்ஷினி (டிடி). சில படங்களிளும் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்த நிலையில் சுந்தர் சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் டிடி நடித்து வருகிறார். இந்த நிலையில் டிடி சமூக வலைத்தளங்களில் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த புகைப்படம் சுந்தர் சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கர்ப்பிணி பெண்ணாக படத்தின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தெரிகிறது.