தி.மு.க ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் மாதம்தோறும் வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதன் காரணமாக தி.மு.க கட்சிக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இந்தத் திட்டம் கைவிடப்படும் என்று மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அப்போது தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது பெண்களுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. இதனையடுத்து பெண்கள் ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத்தலைவி என மாற்றி தர வேண்டுமென மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் சென்றனர். அதன் பிறகு இந்த சம்பவம் வதந்தி என்று வெளியானது.
இதுகுறித்து பட்ஜெட் தாக்கத்தின் போது நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், அது சரியான பிறகு பெண்களுக்கான 1,000 ரூபாய் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மேலும் பெண்களுக்கான 1,000 ரூபாய் திட்டத்திற்காக வருடத்திற்கு 600 கோடி நிதி ஒதுக்க வேண்டும். இதுகுறித்து அறிவிப்பு ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளின் அன்று வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.