Categories
மாநில செய்திகள்

அப்படியா?….தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களால் தான்… அரசு முக்கிய தகவல்….!!!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தான் உருமாறிய கொரோனா பரவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையானது நேற்றைய நிலவரப்படி, 31,536 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் அதிகரித்து வரும் கொரோனவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த கட்டுப்பாடு தளர்வுகள்  இம்மாத இறுதிவரை நடைமுறையில் இருக்கும் நிலையில், முதல்வர் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பானது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து கொரோனா தடுப்பூசி, அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிலருக்கு தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் உள்ளதால்  போடாமல் உள்ளனர். ஆகவே மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க தடுப்பு செலுத்துவது கட்டாயம் என அறிவித்திருப்பதை  எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களால்தான் கொரோனா உருமாற்றம் அடைந்து வருவதாக நிபுணர்கள் ஆய்வு செய்து உள்ளனர்.

ஆகவே மத்திய அரசு கூறியதை அடுத்து, தமிழகத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மாநில அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகத்தான் கொரோனாவின் தாக்கமானது தமிழகத்தில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |