இளம்பெண்ணை தாக்கிய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் பெரியதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகையா என்ற மகன் உள்ளார். இவர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சண்முகையாவுக்கும் அவருடைய மனைவி பெரியதாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியதாய் தனது 2 குழந்தைகளுடன் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குழந்தைகளை பெரியதாயின் தங்கை சந்தனமாரி பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகையா சந்தனமாரியால் தான் தனது மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுப்பதாக ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து மாமனார் வீட்டிற்கு சென்ற சண்முகயா சந்தனமாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சந்தனமாரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சண்முகையாவை கைது செய்துள்ளனர்.