சமந்தா விஜய் தேவரகொண்டாவுக்கு கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதையம் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் முழுக்க காஷ்மீரில் எடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.