Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டின் அருகே இருக்கும் விவசாய நிலத்தில்  விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |