மலையாள நடிகர் டாம் இளைய தளபதி பற்றி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார்.
இந்த நிலையில் டாம் விஜய் பற்றி அவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது “பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது என் அம்மாவை நான் விஜயை சந்திக்க அழைத்துச் சென்றேன். நான் என் அம்மாவிடம் விஜய் சார் கோபப்பட மாட்டார், அவர் மாதிரி அமைதியாக யாராலும் இருக்க முடியாது என்றேன். இதனைத் தொடர்ந்து விஜய் சாரிடம் என் அம்மா இது பற்றி கேட்டார். அதற்கு நானும் மனுஷன் தான் எனக்கும் கோபம் எல்லாம் வரும் ஆனால் நான் வெளிக்காட்ட மாட்டேன் கட்டுப் படுத்திக் கொள்வேன் என்றார்” டாம் கூறியுள்ளார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.