ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா தனது மகளை முதலியார்பட்டியில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக பேருந்தில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து கடையம் மாட்டுச்சந்தை வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த சித்ரா எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சித்ராவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.