முதியவர் சாலையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அம்பேத்கர் தெருவில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சலூன் கடைக்கு முகச்சவரம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற போது முத்தையா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தையாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.