Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வடை சுட எண்ணெய் வேண்டுமா?…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தை  திருடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் முருகன் கோவில் எதிரே வடை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19-ஆம் தேதி ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வடை சுட குறைந்த விலையில் எண்ணைய்  வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை‌ நம்பிய பச்சையம்மாள் இருசக்கர வாகனத்தை  அந்த வாலிபரிடம் கொடுத்து எண்ணைய்  வாங்கி வருமாறு கூறியுள்ளார். உடனே வாலிபரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வாலிபர்  திரும்பி வரவில்லை. இதுகுறித்து பச்சையம்மாள் திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |