Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல்…. அரசு ஊழியர்களின் சம்பளம் கட்…. மாநில அரசின் அதிரடி ஆக்ஷன்…!!!

அலுவலகத்திற்கு தாமதமாக வந்துள்ள ஊழியர்களின் சம்பளத்தை மாநகராட்சி கமிஷனர் பிடித்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 27, 2021 அன்று மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பங்கர் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்திருந்தார். அப்போது அதிகாரிகள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதை பாங்கர் கண்டறிந்த பின்,அலுவலக நேரத்தில் முறையாக வராத ஊழியர்களுக்கு எதிராக மெமோ வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார் .
இந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 17-24 வரையிலான நாட்களில், அலுவலகங்களில் திடீர் வருகைப் பதிவு ஆய்வை அவர் மீண்டும் மேற்கொண்டுள்ளார். அதில் பல பணியாளர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வராததைக் கண்டறிந்தார். ஆனால், அவர்கள் எச்சரிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து ஊழியர்கள் பலர் தாமதமாக வேலைக்குச் சென்றனர். எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கமிஷனர் அபிஜித் பங்கர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மொத்தம் 165 அதிகாரிகள் மீது முறையற்ற வருகைக்காக ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் 2 நாட்கள் தாமதமாக வந்த 22 ஊழியர்களுக்கு 2 நாள் சம்பளமும், 3 நாட்கள் தாமதமாக வந்த 4 ஊழியர்களுக்கு 3 நாள் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக பணிக்கு வந்தவர்களை, பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |