மகரம் ராசி அன்பர்களே…! மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்.
மற்றவர்கள் கடுமையாக செய்யும் வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன் வருவார்கள். பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். மக்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நீண்ட தூர பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் மீது உடமை மீது கவனம் இருக்கட்டும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கும். வீட்டில் உறவினர் வருகை இருக்கும். தேவையில்லாத வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் வாக்குவாதம் எதுவும் வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனையைத் தீரும். மற்றவர்களுக்கு கேலி கிண்டல் பேச்சு எதுவும் செய்ய வேண்டாம். தொழில் ரீதியில் வாக்குறுதிகள் எதுவும் வேண்டாம்.மகரம் ராசி காரர்கள் மனதில் பட்டதை கூறும் நாளாக இருக்கும் அதனால் சில பிரச்சனைகளும் வரும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் மாலை நேரங்களில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிஷ்ட எண் 3 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்.