விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வீட்டில் உபயோக பொருட்களை வாங்க கூடும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படலாம்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனவருத்தம் ஏற்படும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக அமையும். கூடுமானவரை வாக்கு வாதத்தை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அது மட்டுமில்லாமல் மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை