Categories
தேசிய செய்திகள்

சுங்கக் கட்டணம் குறைப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று  மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பாஜகவை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்து பேசியதாவது, தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008 சட்டத்தின்படி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி  இருக்கலாம்.

இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும், சுங்கச்சாவடிகள் மூடப்படும் எனவும் மேலும், 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அந்த தொலைவிற்குள் இன்னொரு சுங்கச்சாவடி இருந்தால் அவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் இருப்பவர்கள், அடிக்கடி பணம் செலுத்தும் நிலையை தவிர்ப்பதற்காக, அவர்களின் ஆதார் அட்டையை காண்பித்தால்  அவர்களுக்கான பாஸ் சுங்கச்சாவடியை கடக்க வழங்கப்படும். அதாவது ஆதார் அட்டையை காண்பித்தால், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்பதை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மேலும் 3 மாதங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் அரசுக்கு பணம் முக்கியம்தான்; ஆனால் அதே சமயம் மக்களும் சிரமப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து விதிகளை மீறிய சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற அதிரடி அறிவிப்பால், தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 சுங்கச்சாவடிகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |