Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு!…. 6,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலரும் தங்கள் வேலையை இழந்து தவித்தனர். இதனால் நாளுக்குநாள் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை தேடி தங்கள் வாழ்நாளை கழித்து வருகின்றனர். தற்போது கொரோனா தாக்கம் முழுமையாக குறைந்த நிலையில், பல வேலைவாய்ப்பு முகாம்களை அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 27/03/2022 அன்று கும்மிடிபூண்டி வட்டம் கவரப்பேட்டை, பெருவாயல், T.J.S. பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் வேலைவாய்ப்புகளை பெறலாம். இவற்றில் 100 தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 6000 காலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். இதில் 18-40 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி.,+2 , ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி. இ., எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முகாம் வாயிலாக வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அத்துடன் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி குறித்த சேவைகள் முகாமில் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044-27660250, 8637639822 மற்றும் 9952493516 போன்ற எண்களுக்கு தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

Categories

Tech |