வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருந்தன்கோடு பகுதியில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டெல்பின் மேரி என்ற மனைவி இருக்கிறார் இந்நிலையில் டெல்பின் மேரி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவர் திரும்பி வரும்போது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெல்பின் மேரி மீறி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 64 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து டெல்பின் மேரி இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.