கன்னி ராசி அன்பர்கள…!!!! இன்று தவிர்க்க இயலாத பணி குறுக்கிடலாம். நண்பரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்கள் தேவைப்படும். அளவான பண வரவு இன்று கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்ல படியாகவே நடக்கும். கவலை வேண்டாம். மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருந்து கொண்டே இருப்பீர்கள்.
இன்று சீரான போக்கு அனைத்து விஷயங்களிலும் காணப்படும். கூடுமானவரை நீங்கள் முயற்சியின் பேரிலே சில காரியங்கள் வெற்றிகரமாக செய்ய முடியும். இன்று மற்றவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும், மற்றவர்களுக்கு நீங்கள் உதவிகளை மேற்கொள்வீர்கள். செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், பணத்தேவைக்காக இன்று யாரிடமும் கடன் வாங்க வேண்டாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்