பெண்ணிடம் 10 1/2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்கன்றுவிலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ஆவார். இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் முட்டை வேண்டுமென மேரி ஸ்டெல்லாவிடம் கேட்டுள்ளார்.
உடனே மேரி ஸ்டெல்லா முட்டையை எடுத்து பொட்டலம் போட்டுள்ளார். அப்போது திடீரென மேரி ஸ்டெல்லாவின் கழுத்திலிருந்த 10 1/2 தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த நபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதுகுறித்து மேரி ஸ்டெல்லா கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.