Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அன்னதான உண்டியல்”…. மாதம் இவ்வளவு வருமானமா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

பிரசித்தி பெற்ற கோவில் உண்டியலில் ரூபாய் 36 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோவிலின் முன்பாக அன்னதான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்டியல் பணம் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படும். அதேப்போன்று இந்த மாதம் உண்டியல் தொகை எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இந்த உண்டியல் பணத்தை திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆய்வர் ராமலட்சுமி, கோவில் மேலாளர் ஆறுமுக தரன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் எண்ணினார்கள்.

Categories

Tech |