Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 35 லட்சம் மக்கள்…. ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மொத்தமாக 35 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 27-வ து நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகர்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகரை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. இந்தப் போரில் உக்ரைன் கடுமையாக சேதமடைந்திருக்கிறது.

அந்நாட்டு மக்கள் லட்சகணக்கில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 35 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் ஐநாவிற்கான முகமை கூறியிருக்கிறது.

Categories

Tech |