பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாடிகோட்டை கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சங்கரிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கரி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் படுகாயமடைந்த சங்கரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.