Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நீ காதலிக்க கூடாது” பெற்றோரின் செயலால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி கண்ணப்பர் தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான மனோஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் குமார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மனோஜ் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோஜ் குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் மனோஜ்குமாரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த மனோஜ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |