Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான பொருட்கள்…. பேரூராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்….!!

பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடல் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது அதன் அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே பழைய கட்டிடத்தில் மின்சார சாதனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |