சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கீழ தென்கலம் கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் ஊர் நாட்டாமை செல்வன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாழையூத்து பஞ்சாயத்து கீழ தென்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது.
இந்த பள்ளி 1988-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தற்போது இந்த பள்ளி சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கட்டடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.