கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூவாச்சிப்பட்டி கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அசோக் தனது நண்பரான மருதுபாண்டி என்பவருடன் கேரளாவில் இருக்கும் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அசோக், மருதுபாண்டி, சபரி செல்வம் ஆகியோர் கூவாச்சிப்பட்டி கிறிஸ்தவ ஆலயம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது நண்பர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மருதுபாண்டியும், சபரி செல்வமும் இணைந்து அசோக்கை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அசோக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அசோக் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருதுபாண்டி மற்றும் சபரி செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.