சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் படித்து வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வியானது கேள்விக் குறியாகி இருக்கிறது.
கொரோனா எனும் கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பயனாக கொரோனா சற்று சீரடைந்து வந்தது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், பல்வேறு பகுதிகள் மாபெரும் பூட்டுதலுக்கு தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் முன்னதாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மாணவர்கள் நேரடி கல்விக்காக சீனா செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால் மாணவர்களின் தேவைக்கேற்றவாறு நாட்டிற்குள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை, இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மருத்துவம் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் நடப்பு ஆண்டிலும் நேரடி கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.