மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதை தடுப்பதற்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணம் செய்வதாக பல்வேறு புகார்கள் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சென்னையில் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டது. இதில் திருப்பூர்- கோவை வழித்தடம், உடுமலை-தளி, உடுமலை- பொள்ளாச்சி, வஞ்சிபாளையம்- திருப்பூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் திருப்பூர் காங்கயம் ரோடு தாராபுரம் ரோடு ஆகியவைகள் பாதுகாப்பற்ற வழித்தடங்களாக கண்டறியப்பட்டது.
இதன்பிறகு சாலை பாதுகாப்பு மன்றத்தை சிறப்பாக நடத்தவேண்டும் எனவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பாதுகாப்பாகப் பயணம் செய்வது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனையடுத்து கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் கூட்டமாக வந்து பேருந்துகளில் ஏறுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிகளில் மாணவர்களை 15 நிமிட இடைவெளியில் வெளியே அனுப்ப வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.