ஹீரோ ஹோண்டா 1984ல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஆகியவற்றில் ஒரு கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உள்ளது. 2010ஆம் ஆண்டில் வர்த்தக கூட்டை முறித்துக்கொள்ள ஹோண்டா நிறுவனம் முடிவு செய்தது. இதனையடுத்து ஒரு நிறுவனம்ஹோண்டாவிடம் இருந்த அனைத்து பங்குகளையும் வாங்கிக்கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் என்ற புதிய பெயர் பெற்றது.
இந்நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தலைவர் பவன் முன்ஜால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹீரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பலரது வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகம் முழுவதும் 40 நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகிறது.