மின்சார வாகனங்களின் விலை கூடிய விரைவில் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து அமைச்சக மானியம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார். இவர் கழிவு நீரை சுத்தப்படுத்தி தூய்மையான ஹைட்ரஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறைந்த விலையில் கிடைக்கும் மாற்று எரிபொருள் ஆகும்.
இந்த ஹைட்ரஜன் எரிபொருள் நடைமுறைக்கு வந்துவிட்டால் இன்னும் 2 வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். இந்த தொழில்நுட்பத்தை எம்.பிகள் தங்களது மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும். மேலும் லித்தியம் அயன் பேட்டரி விலையும் குறைந்து வருவதாகவும் மந்திரி கூறியுள்ளார்.