Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக பெற்றோர் மொபைலுக்கு பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. அந்த வகையில் ” காலை பள்ளி தொடங்கும் சரியான நேரத்தில் மாணவர்களின் வருகை, பெற்றோர் கையெழுத்துடன் வகுப்பாசிரியர் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்தல், அனைத்து பள்ளிகளிலும் பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது” உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |