உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று கூறிவருகிறார். இந்த போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ அணு ஆயுதம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதாவது ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர், “எங்களுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம். இந்த உலகத்தில் ரஷ்யா என்ற நாடு இருக்குமா ? இருக்காதா ? என்ற உச்சகட்ட அச்சுறுத்தல் ஏற்படும் போது கட்டாயம் நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.