குன்னம் அருகே முதியவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலுள்ள மருவத்தூர் கிராமத்தில் 58 வயதான அருணாச்சலம் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பழனியம்மாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
அருணாசலத்திற்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர். அவரது மகள் ஆனந்தஜோதி திருமணமாகி தர்மபுரியில் வசித்து வருகிறார். மகன் ஆனந்தராஜ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றார். மேலும்அருணாச்சலம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து அருணாச்சலத்தின் நெருங்கிய உறவினரான ராமமூர்த்தி வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது . இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் மருவத்தூர் காவல் ஆய்வாளர் சண்முகம் விசாரணை நடத்தி வருகின்றார்.