புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு 45-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்ள 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம சேவை மையத்திற்கு பள்ளி தற்காலிகமாக மாற்றப்பட்டது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஒரே அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய பள்ளி கட்டிடம் அமைத்து தருமாறு கிராமமக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.