இரண்டாம் திருப்புதல் தேர்விற்க்கு இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
அப்போது திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன் கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள்கள் வெளியான இந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 28ம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தேர்வில் வினாத்தாள் லீக் ஆகாமல் தடுப்பதற்காக இரண்டு வகை வினாத்தாள்களை பள்ளிக்கல்வித் துறை தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை வினாத்தாள் லீக் ஆனால் மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்திருக்கின்றனர். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.