Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 கோடி ரூபாய்” ஊராட்சி மன்ற நிதியில் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ 2 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது மின்சார உபரி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

அதாவது ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே பணம் பட்டுவாடா செய்யப் பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அதிகாரிகளை அனுப்பி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |