புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்திய போது சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் லட்சுமியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் 15 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.