சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது.
இரண்டு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து கிருஷ்ணன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.