Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு…. அவகாசத்தை நீட்டிக்க முடியாது…. அமைச்சர் திடீர் அறிவிப்பு…..!!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 3-வது நாளாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். ஆகவே குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தும் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |