தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் கிடைக்கும் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் தினசரி ரேஷன்கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இப்போது அனைத்துதுறைகளுமே கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கு முன்னதாக அலுவலகத்துக்கு சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவேண்டி இருந்தது.
இதையடுத்து இந்த ரேஷன் கார்டு பல்வேறு மாதங்களுக்கு பிறகே விண்ணப்பித்தவர்களுக்கு கிடைத்தது. தற்போது ஆன்லைன் மூலம் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் கைகளில் கிடைக்கிறது. இதில் குடும்பத்தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம் (அல்லது) வட்டம், எந்தக் கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் கேட்கப்படுகிறது. இப்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை குறித்து விரிவாக காணலாம்.
# புதிய ஸ்மார்ட்கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முதலாவதாக https://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். இதன் முகப்புப் பக்கத்திலுள்ள ஸ்மார்ட் கார்டு என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
# தற்போது திரையில் தோன்றும் படிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், முகவரி ஆகிய விபரங்களை உள்ளிடவும்.
# இந்த படிவத்தை பூர்த்தி செய்த பின் அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைக்கவும்.
# இந்த ஆவணத்தின் அளவு 1.0 MB கொண்டதாக இருத்தல் வேண்டும். இந்த ஆவணம் png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
# அதன்பின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள், எரிவாயு இணைப்பு தொடர்பான விபரங்களை உள்ளிடவும்.
# முடிவில் reference எண் வழங்கப்படும். இதை பயன்படுத்தி ரேஷன் கார்டின் நிலையை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
# தற்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு பின் தங்களின் முகவரிக்கு ரேஷன் கார்டு அனுப்பி வைக்கப்படும்.