தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 மாகாணங்களில் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதும் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் அங்கு கொரோனா வைரஸ்ஸின் புதிய அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.இதையடுத்து, டோக்கியோ, ஒசாகோ, சிபா, சைதாமா உள்பட 18 மாகாணங்களில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் தற்போது பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்ற நிலையில், தலைநகர் டோக்கியோ உட்பட 18 மாகாணங்களிலும் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.